தினத்தந்தி
செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் கடலை மாவுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் இந்தக் கலவையை அதில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இறுதியாக உப்பு, காரம் சரிபார்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும். சுவையான பருப்பில்லாத திடீர் சாம்பார் தயார். இதனை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.