தினத்தந்தி
🍚பச்சரிசியை ஊறவைத்து தேங்காயுடன் அரைத்து, பாலில் வேக வைத்து பாயசம் செய்தால் சுவை அசத்தலாக இருக்கும்.
அடை மாவில் பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தால், சுவை அதிகரிப்பதுடன் வாயுத் தொல்லையும் குறையும்.
🥥 அவியல் தயாரான பிறகு இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்தால் மணமும் சுவையும் கூடும்.
🍋 எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது, ஒரு பெரிய துண்டு இஞ்சியை நறுக்கி சேர்த்தால் ஊறுகாய் கூடுதல் மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.
🍆 கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது, ஒரு ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் கருப்பாகாமல், நிறமும் சுவையும் நன்றாக இருக்கும்.
🧈 நெய் காய்ச்சி இறக்கும் நேரத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால், நீண்ட நாட்கள் மணம் மாறாமல் இருக்கும்.
பீன்ஸ், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை வேகவைக்கும் போது, உப்பை இறுதியில் சேர்த்தால் விரைவாக வெந்து சுவையாக இருக்கும்.
🍘 வடை மாவில் சிறிதளவு சாதம் சேர்த்து பிசைந்து வடை சுட்டால், எண்ணெய் அதிகம் குடிக்காது. வடை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.