இதயத்திலிருந்து குடல்வரை பாதுகாக்கும் நூல்கோல்!

தினத்தந்தி

நூல்கோல் காய்கறி (Knol Khol) அதிக நீர்ச்சத்து கொண்ட, ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சிறந்த காய்கறியாகும். ஆனால் பலர் இதனை உணவில் சேர்ப்பதில்லை. உண்மையில், இதில் உள்ள நன்மைகளை அறிந்தால், இதனை தவிர்க்க முடியாது.

எலும்பு ஆரோக்கியம்:வைட்டமின் A, C, E மற்றும் மாங்கனீசு நிறைந்ததால், எலும்புகளை பலப்படுத்தி வளர்ச்சிக்கு உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்:நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை சீராக்கி, வயிற்றுப்புண் மற்றும் குடல் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

நுரையீரல் பாதுகாப்பு:நூல்கோல் மற்றும் அதன் இலைகளில் உள்ள வைட்டமின் A, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சளி பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கலை சரி செய்யும்:நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.

உடல் எடை குறைப்பு:குறைந்த கலோரி கொண்டதால், எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு.

இதயம் ஆரோக்கியம்: கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சரும நலம்: சுருக்கங்கள் மற்றும் தோல் பிரச்சனைகளை குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நூல்கோலில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ரன்களில் அவுட்டான அணிகள்!