பெண்களுக்கு பெரிதும் உதவும் கொத்தவரங்காய்!

தினத்தந்தி

கொத்தவரங்காயில் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைகிறது.

கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக ரத்தம் சுரக்கும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை எரித்து, உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும்.

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை தடுக்கப்படும்.

பல நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு முள்ளங்கி!