குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆப்பிள் கொடுக்கலாம். ஆப்பிளை தோல் நீக்கி, ஆவியில் வேகவைத்து, நன்கு மசித்துக் கொடுப்பதுதான் சரியான முறையாகும். ஒன்பது மாதங்களைக் கடந்த குழந்தைகளுக்கும் ஆப்பிளை தோலுடன் கொடுக்கும்போது தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதால், தோலை நீக்கிக் கொடுப்பது பாதுகாப்பானது.