வழக்கறிஞர்: முதலில் கருப்பு அங்கி எங்கு அணியப்பட்டது?

தினத்தந்தி

இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. இங்கு கருப்பு உடை அணிந்தால் வெப்பத்தை உறிஞ்சி (Absorb Heat) உடம்பு தீப்பிடிக்கிற மாதிரி இருக்கும்.ஆனாலும், நம்ம வக்கீல்கள் ஏன் வேர்க்க விறுவிறுக்க அந்தக் கருப்பு கோட்டைப் போடுறாங்க?

இந்த வழக்கம் 1685-ல் இங்கிலாந்தில் தொடங்கியது. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் (King Charles II) இறந்தபோது, மக்கள் அனைவரும் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள், மன்னருக்கு மரியாதை செலுத்த "கருப்பு அங்கி" (Black Gown) அணிந்து துக்கம் அனுசரித்தனர்.

அன்று உடுத்திய உடை , அப்படியே ஒரு மரபாக மாறி, உலகம் முழுக்கப் பரவி இன்றும் தொடர்கிறது!

ஒரு வக்கீல் வாதாடும்போது, அவர் தன்னுடைய கருத்தில் உறுதியாகவும், ஆளுமையுடனும் இருக்கிறார் என்பதை இந்த நிறம் உணர்த்துகிறது.

கருப்பு நிறம் "பார்வையற்றது" (Opaque). நீதி தேவதை எப்படி கண்ணைக் கட்டிக்கொண்டு பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குகிறார்களோ, அதேபோல் வக்கீல்களும் நிறம், இனம் பார்க்காமல் சட்டத்திற்காக நிற்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

கருப்பு மற்றும் வெள்ளை என்பது மிக எளிமையான மற்றும் கண்ணியமான தோற்றம். வக்கீலின் உடையைப் பார்க்காமல், அவர் சொல்லும் "வாதத்தை" (Arguments) மட்டும் கவனிக்க இது உதவுகிறது.

இந்தியாவில் 1961-ம் ஆண்டு வக்கீல்கள் சட்டம் (Advocates Act), வக்கீல்கள் கட்டாயமாக கருப்பு கோட் அணிய வேண்டும் என்று விதிமுறையே வகுத்துள்ளது!

கேரளாவின் காஷ்மீர்... அழகிய மலை கிராமத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்!