தினத்தந்தி
மினி காஷ்மீர் என அழைக்கப்படும் காந்தளூர் மலை கிராமம், மூணாறு அருகே அமைந்துள்ளது. இயற்கையை நேசிப்பவர்களுக்கும், அமைதியான விடுமுறையைத் தேடுபவர்களுக்கும் ஒரு அற்புதமான இடமாகும்.
இதன் குளிர்ந்த காலநிலையாலும், ஆப்பிள், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழத்தோட்டங்களாலும், பசுமையான இயற்கை அழகாலும் "தென்னிந்தியாவின் மினி காஷ்மீர்" என்று அழைக்கப்படுகிறது.
டென்ட் ஸ்டே - காந்தளூரின் அழகை காண நினைப்பவர்கள் டென்ட் ஸ்டே என சொல்லப்படும் கூடார அமைப்புகளில் தங்குவது நல்ல அனுபவத்தை அளிக்கும். சுற்றிலும் மலைகள் இருப்பதால் இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம்.
குளிர்ச்சியான காலநிலை - கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் இருப்பதால், ஆண்டு முழுவதும் இதமான மற்றும் குளிர்ந்த வானிலையைக் கொண்டுள்ளது.
குறிஞ்சி பூக்கள் - வெயிலின் கடுமை தெரியாது இருக்கும் இந்த கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. கடைசியாக 2018ல் பூத்துள்ள நிலையில், 2030ல் காண முடியும்
சாகசப் பயணம் - மணம் வீசும் சந்தனக் காடுகள், நீர்வீழ்ச்சிகள், மற்றும் பரந்த பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை ஜீப்பில் சுற்றிப் பார்க்கலாம். சாதாரண வாகனங்கள் செல்ல முடியாத கரடுமுரடான பாதைகளில் ஜீப் சவாரி செய்வது ஒரு திரில்லிங் அனுபவத்தைத் தரும்.
நீர்வீழ்ச்சிகள் - காந்தளூரில் எரச்சில் பறா அருவி, கீழாந்தூர் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமாகும். அதேபோல், சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் தூவானம் அருவியும் அமைந்துள்ளது