தினத்தந்தி
ஆரோக்கியமான கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். இம்மாதிரி சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பை, உடலில் தேவையில்லாத இடத்தில் சேரவிடாது.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி கொள்ளு ரசம் குடிக்கலாம்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து தினமும் குடிக்கலாம்.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு தினமும் குடிக்கலாம்.
பசி இல்லாதபோது உண்ணக் கூடாது. பசி இல்லாமல் உண்ணும் உணவு அனைத்தும் உடல் எடையைக் கூட்டும்.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
சில பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகுதான் உடல் எடையும் கூடிவிடுகிறது. இவர்களெல்லாம் வீட்டிலேயே தினமும் சிறிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.