ஆரோக்கியமான காலை நேர பழக்கங்கள்

தினத்தந்தி

1. சரியான நேரத்தில் எழுந்திருத்தல் – அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்க வேண்டும்.

2. தண்ணீர் குடித்தல்– எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்க உதவும்.

3. சுகாதாரம்– பல் துலக்கி, முகம் கழுவி, குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

4. உடற்பயிற்சி – நடைப்பயிற்சி, யோகா அல்லது எளிய உடற்பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யலாம்.

5. தியானம் – சில நிமிடங்கள் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி செய்வது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.

6. சத்தான காலை உணவு– பழங்கள், முட்டை, காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. வேலைகளை திட்டமிடுதல் – அன்று செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை முன்கூட்டியே திட்டமிடுவது நேரத்தை சிறப்பாக பயன்படுத்த உதவும்.

8. நல்ல எண்ணங்களுடன் தொடங்குதல் – மொபைலை அதிகமாக பயன்படுத்தாமல், நேர்மறையான எண்ணங்களுடன் நாளை தொடங்க வேண்டும்.

8 வகையான விதைகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்