தினத்தந்தி
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை தேசிய மாணவர் படை தினம் கொண்டாடப்படுகிறது. 2026-ல் நவம்பர் 22-ம் தேதி கொண்டாடப்பட்டது.
தேசிய மாணவர் படை (NCC) 1948-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது.
NCC என்பதன் விரிவாக்கம் National Cadet Corps ஆகும். தமிழில் தேசிய மாணவர் படை என்று அழைக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள் இதில் தன்னார்வமாக இணைந்து பயிற்சி பெறலாம்.
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளின் அடிப்படையில் NCC பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அணிவகுப்பு, உடற்பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல் மற்றும் சாகசப் பயிற்சிகள் இதில் இடம்பெறுகின்றன.
இயற்கைப் பேரிடர், ரத்ததான முகாம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சமூக சேவைகளிலும் NCC மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இளைஞர்களிடம் ஒழுக்கம், தலைமைப் பண்பு, தேசப்பற்று மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதே NCC அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.