தினத்தந்தி
நவ்காசனம் “படகு ஆசனம்” என்றும் அழைக்கப்படுகிறது. “நவ்கா” என்றால் படகு என்று பொருள்.
இந்த ஆசனம் வயிற்றுத் தசைகளுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் செரிமானம் மேம்படும்.
அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குறைய உதவுகிறது.
வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க உதவுகிறது.
வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இந்த ஆசனம் துணைபுரிகிறது.
கணையத்தின் செயல்பாட்டை தூண்டி, கணைய நீர் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கவும், நரம்புத் தளர்ச்சியை போக்கவும் உதவுகிறது.
நுரையீரலை பலப்படுத்தி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகளின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.