சத்தான காலை உணவு: சிவப்பு அரிசி ஊத்தப்பம் செய்வது எப்படி?

தினத்தந்தி

வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. இன்று சிவப்பு அரிசியில் சத்தான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சிவப்பு அரிசி, உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய்.

செய்முறை: முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சிவப்பு அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பிறகு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து கலக்கி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பின்னர் மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறினால் சுவையான, சத்தான சிவப்பு அரிசி ஊத்தப்பம் தயார்.

சுவை மிகுந்த காரசாரமான ஆட்டு ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி?