ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்!

தினத்தந்தி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய சுவையான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஓணம் சத்யாவில் இடம்பெறும் முக்கியமான இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.

தேவையான பொருட்கள்: அரிசி - ½ டம்ளர், தேங்காய்ப்பால் - 4 டம்ளர், வெல்லம் - 2 டம்ளர், பால் - 1 டம்ளர், ஏலக்காய் தூள் - தேவையான அளவு, தேங்காய் துண்டுகள் - ஒரு கைப்பிடி, முந்திரி - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு, உலர்திராட்சை - 2 ஸ்பூன்.

செய்முறை: முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

அரிசியை நன்றாக ஊறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் நைசாகவும் அரைத்துக்கொள்ளவும். வாழை இலையில் சிறிது நெய் தடவி, அரைத்த மாவை மெலிதாகப் பரப்பவும். இலையை மெதுவாக மடித்து நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்.

மாவு நன்றாக வெந்ததும் ஆறவைத்து, வாழை இலையிலிருந்து பிரித்தெடுக்கவும். பின்னர் அதை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, உலர்திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெட்டிய அடை துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.

அடுத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். கலவை நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயாசம் செய்வது எப்படி?