காலை டிபனுக்கு எது பெஸ்ட்? இந்த 8 உணவுகளுக்கு சத்துத் தரவரிசை பாருங்க!

தினத்தந்தி

காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவுகளைத் தேர்வு செய்வது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவும். அவற்றில் சிறந்த 8 உணவுகள்:

1. இட்லி - சாம்பார்; கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் தாதுக்கள் கிடைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற காலை உணவு.

2. தோசை - தேங்காய் சட்னி; தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடும்போது கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன.

3. பொங்கல் - சாம்பார் - சட்னி; பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் பொங்கல் புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும். அதிக கொழுப்பு சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

4. கோதுமை பூரி - உருளைக்கிழங்கு; மைதாவுக்குப் பதிலாக கோதுமை மாவில் பூரி தயாரிப்பது சிறந்தது. இருப்பினும், எண்ணெயில் பொரித்த உணவு என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.

5. சப்பாத்தி - சப்ஜி: காய்கறிகளுடன் சப்பாத்தி சாப்பிடுவது நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும். முழு கோதுமை சப்பாத்தியைத் தேர்வு செய்வது சிறப்பு.

6. காய்கறி உப்புமா - தேங்காய் சட்னி: காய்கறிகளைச் சேர்த்து தயாரிக்கும் உப்புமா நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்களை வழங்கும். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

7. புட்டு - கொண்டைக்கடலை; புட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டுடன், கொண்டைக்கடலையில் உள்ள புரதமும் சேர்வதால் சத்தான மற்றும் நிறைவான காலை உணவாக அமையும்.

8. சத்துமாவு கஞ்சி - பழங்கள்: குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சத்துமாவு கஞ்சி ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். அதனுடன் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களைச் சேர்த்துக்கொள்வது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவும்.

கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன?