ஆரஞ்சு - நெல்லிக்காய்; உடல் எடை குறைப்புக்கு எது சிறந்தது தெரியுமா?

தினத்தந்தி

ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் இரண்டும் வைட்டமின் சி, நார்ச்சத்து, வளர்சிதை மாற்றம், ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்ப பெற்றவை. இவை உடல் எடை குறைப்பிற்கு வழிவகுப்பவை.

credit: pixabay

தொடர்ந்து நெல்லிக்காயை உட்கொண்டால் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் காரணமாக கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவது கலோரி எரிப்பை துரிதப்படுத்தும்.

credit: pixabay

நெல்லிக்காயுடன் ஒப்பிடும்போது ஆரஞ்சு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, பசியை கட்டுப்படுத்தி, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை குறைக்க உதவிடும். உடலில் நீரேற்றத்தை தக்கவைக்க துணைபுரியும்.

credit: pixabay

உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். ஆரஞ்சு பசியை கட்டுப்படுத்த உதவுகிறது என்றாலும், நெல்லிக்காய் கொழுப்பை எரிக்க வழிவகுக்கும். உடல் எடையை குறைப்பதற்கு இவை இரண்டுமே அவசியமானவை.

credit: pixabay

எதில் ஊட்டச்சத்து அதிகம்? - 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் சுமார் 87 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. வைட்டமின் சி 53 மில்லி கிராமும், செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து 2.4 கிராமும் உள்ளடங்கி இருக்கும். 47 கலோரிகளும் காணப்படும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் பசியை கட்டுப்படுத்தும்.

credit: pixabay

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மி.கி வரை காணப்படும். அதாவது ஒரு ஆரஞ்சு பழத்தை விட 10 மடங்கு அதிக வைட்டமின் சி நெல்லிக்காயில் இருக்கிறது. கலோரிகளும் (44) குறைவு.

credit: pixabay

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்க செய்யும். உடலில் சேரும் கொழுப்பையும் ஒழுங்குபடுத்தும்.

credit: pixabay
வியப்பூட்டும் விரால் மீனின் நன்மைகள்!