மிளகு பனங்கற்கண்டு பால் செய்முறை!

தினத்தந்தி

தேவையான பொருட்கள்; பால் – 1 கப், மிளகுத் தூள் – ¼ முதல் ½ தேக்கரண்டி, பனங்கற்கண்டு – 2 முதல் 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்).

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.

பால் கொதிக்கத் தொடங்கியதும் கால் முதல் அரை தேக்கரண்டி வரை மிளகுத் தூள் சேர்க்கவும்.

விருப்பப்பட்டால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இதனை 1 முதல் 2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, 2 முதல் 3 தேக்கரண்டி பொடித்த பனங்கற்கண்டு சேர்க்கவும்.

பனங்கற்கண்டு முழுவதுமாகக் கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.

தேவைப்பட்டால் வடிகட்டி ஒரு குவளையில் ஊற்றவும். சுவையான மிளகு பனங்கற்கண்டு பாலை சூடாகப் பரிமாறவும்.

கடை ஸ்டைல் உருளைக்கிழங்கு சமோசா!