தினத்தந்தி
அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமெலைன் என்ற நொதி சுவாச பாதைகளைத் தெளிவாக்க உதவி செய்யும்.
அதாவது நுரையீரல்கள் மற்றும் மூச்சுக்குழாய்களில் தேங்கும் சளியை கரைக்க புரோமெலைன் உதவும்.
மூக்கு துவாரங்கள் மற்றும் சுவாசப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் செய்யும்.
இருமல் மற்றும் சளி தொடர்பான தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
அன்னாசி பழத்தையோ, அன்னாசி ஜூஸையோ உட்கொள்வது இருமலை தணிக்கவும், ஒவ்வாமையால் ஏற்படும் சைனஸ் வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
இதனால் சுவாச ஆரோக்கியத்தில் அன்னாசி பழம் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. காலையில் அன்னாசி பழ ஜூஸ் பருகலாம். அல்லது அன்னாசி பழ துண்டுகளை ருசிக்கலாம்.
அன்னாசிப்பழ சாற்றை தேனுடன் கலந்து அருந்துவது இருமலுக்கு விரைவான நிவாரணம் அளிக்கும்.