தினத்தந்தி
தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலரும்.
‘ஸ்கிரிப்டை’ யார் வேண்டுமானாலும் மனப்பாடம் செய்து பேசலாம். விஜய் ஏற்கனவே கை தேர்ந்த நடிகர்.
அவருக்கு உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதன் மூலம் அவர் அதை வெளிப்படுத்துகிறார்.
ஒரு முறையாவது பத்திரிகையாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள்; பார்க்கலாம்.
இயக்குநர்கள் ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை விஜய் நடிகராக வசனம் பேசுகிறார். ஆரம்பத்தில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்று விஜய் கூறினார்.
எந்த கட்சியும் த.வெ.க. பக்கம் செல்லவில்லை. யாரும் செல்லாததால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனை கடிக்கும் கதையைப் போல இப்போது எங்கள் (அ.தி.மு.க.) பக்கம் விஜய் திரும்பியுள்ளார்.
அப்படி திரும்பினால் த.வெ.க.வுக்கும் விஜய்க்கும் வீணாக வாங்கிக்கொள்ளும் நிலைமைதான் ஏற்படும்.
தமிழ்நாட்டில் தி.மு.க. படுதோல்வி அடையப் போகிறது. அரசுப் பணத்தை வாரி வாரி செலவழிக்கிறார்கள். அப்படி செலவழித்தாலும் வெற்றி பெற முடியாது.