தினத்தந்தி
நாம் ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்படும். அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீதம் ரத்து செய்ய சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்தில் யாரும் மத்திய, மாநில அரசு பணியில் இல்லாத பட்சத்தில் அவர்களின் குழந்தைகள் என்ஜினீயரிங் படிப்பு செலவை முழுமையாக அரசு ஏற்கும்.
நெல் மூட்டைகள் வீணாவது பாதுகாக்கப்படும். கமிஷன் வாங்குவது தடுக்கப்படும். அவ்வாறு நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை. பெண்ணுக்கு பெண் எடையாளர், ஆண்களுச்கு ஆண் எடையாளர் நியமனம் செய்யப்படும்.
ரேஷன் பொருட்கள் பாக்கெட் செய்து வழங்கப்படும். மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசுக்கு தவெக அரசு அழுத்தம் கொடுக்கும்.