மழை + மின்சாரம்... ஆபத்தைத் தவிர்க்க இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

தினத்தந்தி

ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை இயக்கக் கூடாது. வீட்டின் சுவர்கள் ஈரமாக இருந்தாலும் சுவிட்சுகளை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், செல்போன் சார்ஜர் உள்ளிட்ட சாதனங்களை பிளக்கில் இணைக்கும்போதும், அகற்றும்போதும் முதலில் சுவிட்சை அணைக்க வேண்டும்.

மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால், அவற்றைத் தொடவோ அருகில் செல்லவோ கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே வயர்கள் அருகில் மழைக்காலங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் மின் சாதனங்களுக்கு அருகிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மின்சார மேல்நிலைக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை தாங்களாக வெட்ட முயற்சிக்கக் கூடாது. அவற்றை அகற்ற மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.

மின்கம்பங்கள் அல்லது அவற்றைத் தாங்கும் ஸ்டே வயர்களில் கயிறு, கொடி போன்றவற்றைக் கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின்கம்பங்களில் கால்நடைகளையும் கட்டக்கூடாது.

இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் டிவி, கணினி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளி, மரங்களின் கீழ் அல்லது மின்கம்பங்களுக்கு அருகில் நிற்கக் கூடாது.

உடைந்த சுவிட்ச், பிளக், பழுதடைந்த வயர்கள் மற்றும் மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும். வீடுகளில் சரியான எர்த் இணைப்பை ஏற்படுத்தி, தரமான மின்சாதனங்கள் மற்றும் வயர்களை மட்டுமே பயன்படுத்துவது மின்விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

TNPL வரலாற்றில் அதிக முறை சாம்பியனான அணி எது?