தமிழர் பெருமை! மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்தநாள் சிறப்பு!

தினத்தந்தி

கி.பி. 985 முதல் 1014 வரை சோழப் பேரரசை ஆட்சி செய்த புகழ்பெற்ற மன்னர் ராஜராஜ சோழன்.

இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். ஆட்சிக்கு வந்த பிறகு ராஜராஜ சோழன் என்ற பெயரால் புகழ்பெற்றார்.

தஞ்சாவூரில் பிரம்மாண்டமான பெரிய கோயிலைக் கட்டுவித்தவர். இது சோழர்களின் கட்டிடக்கலைத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவரது ஆட்சியில் சோழர்களின் கடற்படை வலிமை பெற்றது. இலங்கையின் சில பகுதிகளையும் மாலத்தீவுகளையும் கைப்பற்றியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

பேரரசின் நிலங்கள், வரிகள் மற்றும் வருவாயைக் கணக்கிடுவதில் முறையான நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்.

கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இவரது ஆட்சி, கொடைகள், நிர்வாகம் மற்றும் அக்காலச் சமூக வாழ்க்கை பற்றிய தகவல்களை அறிய முடிகிறது.

கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற கலைகள் சோழர் காலத்தில் சிறப்பான வளர்ச்சி பெற்றன.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தஞ்சைப் பெரிய கோயிலும் ராஜராஜ சோழனின் சாதனைகளும் தமிழ் மக்களின் வரலாற்றுப் பெருமையை எடுத்துரைக்கின்றன.

நம் முன்னோர்கள் பின்பற்றிய வியக்க வைக்கும் பழக்கங்கள்!