ரெக்கார்டுகளை உடைக்கும் ராட்சசன்..உலகையே மிரள வைத்த ஹாலண்ட்!

தினத்தந்தி

ஒரு வீரரை இரண்டு பேர், மூன்று பேர் சேர்ந்தாலும் பயனில்லை. பந்து அவரது காலை தொட்டு விட்டால், அடுத்த சில நொடிகளில் அது வலையை முத்தமிடும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட அசுர தாக்குதல் வீரர்தான் நார்வே அணியின் நட்சத்திர வீரர் 'எர்லிங் ஹாலண்ட்'.

photo:x/@Erling

அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலும், களத்தில் காட்டும் ஆதிக்கமும், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை மட்டுமல்ல, முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

photo:x/@Erling

ஹாலண்டின் மிகப்பெரிய பலம் அவரது வேகம்தான். 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட அவர், மலைபோல் உறுதியான உடலமைப்புடன் மின்னல் வேகத்தில் ஓடுகிறார். பொதுவாக உயரமான வீரர்கள் வேகத்தில் பின்தங்குவார்கள். ஆனால், ஹாலண்ட் அந்த விதியையே உடைத்தவர்.

photo:x/@Erling

அவரை முந்துவது டிபெண்டிங் வீரர்களுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. அவரது இன்னொரு அசாதாரண திறன் கோல் முன் நிலையை கணிக்கும் புத்திக்கூர்மை. பந்து எங்கு வரும் என்பதை சில நொடிகளுக்கு முன்பே கணித்து சரியான இடத்தில் நிற்பார்.

photo:x/@Erling

ஒரு உதையிலேயே பந்தை கோலாக மாற்றிவிடும் திறன் அவருக்கு இயல்பாகவே உள்ளது. கிடைத்த வாய்ப்பை கோலாக்குவது ஹாலண்டின் அடையாளம். தேவையற்ற டிரிப்ளிங், ஆடம்பரமான ஆட்டம் என எதிலும் நேரத்தை வீணாக்க மாட்டார்.

photo:x/@Erling

மைதானத்தில் எதிரணியினர் கடுமையாக சீண்டினாலும், உடலால் மோதினாலும் அவர் பதற்றம் அடைவதில்லை. தனது இலக்கில் மட்டும் கவனம் செலுத்தி, சரியான தருணத்தில் தாக்குதல் நடத்துவதே அவரது பாணி.

photo:x/@Erling

அந்த மனப்பக்குவம்தான் அவரை மற்ற முன்கள வீரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. அவருடைய ஒரே குறிக்கோள் கோல். அதனால்தான் அவர் முறியடிக்கும் சாதனைகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது.

photo:x/@Erling

வேகம், பலம், புத்திக்கூர்மை, கோல் பசி, அசைக்க முடியாத மன உறுதி... இந்த ஐந்தும் ஒன்றாக சேர்ந்ததால்தான், இன்று உலக கால்பந்தில் ஹாலண்ட் ஒரு சாதாரண ஸ்டிரைக்கர் அல்ல; 'கோல் இயந்திரம்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

photo:x/@Erling

உலக கால்பந்தின் அடுத்த பல ஆண்டுகளையும் ஆளப்போகும் நட்சத்திரமாகவே அவரை கால்பந்து உலகம் பார்க்கிறது.

photo:x/@Erling
உலகக் கோப்பை கால்பந்து வரலாறு!