மீண்டும் எழும் கொரோனா அச்சம் - அலட்சியம் செய்யக்கூடாத புதிய அறிகுறிகள்!

தினத்தந்தி

ஆந்திரவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து, உயிரிழப்புகளும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா முடிவுக்கு வந்துவிட்ட தாக பலரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் இன்னும் நம்மிடையே இருப்பதாக மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.

Photo: magnific

மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, பல நாட்களாக நீடிக்கும் அதிக காய்ச்சல், குழப்பமான மனநிலை, விழித்திருக்க முடியாத அளவுக்கு அதிக தூக்கக் கலக்கம் போன்ற அறிகுறிகள் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியமானது.

Photo: magnific

தற்போது கொரோனா மட்டும் அல்ல இன்புளூயன்சா, ஆர்.எஸ்.வி. (ரெஸ்பிரேட்டரி சின்சிட்டியல் வைரஸ்), அடினோவைரஸ் போன்ற சுவாச தொற்றுகளும் பரவி வருகின்றன. சிலருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுகள் கூட ஏற்படலாம்.

Photo: magnific

கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், இருமல் அல்லது தும்மலின்போது வாய், மூக்கை மூடுங்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வீட்டிலேயே ஓய்வெடுங்கள் மற்றும் சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணியுங்கள்.

Photo: magnific

அதிக ஆபத்து உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்ளுங்கள்.

Photo: magnific

மருத்துவ நிபுணர்கள் பலரின் கருத்துப்படி, கொரோனா இனி பருவகால ஜலதோஷம், காய்ச்சல் போல அவ்வப்போது பரவக்கூடிய வைரஸாக மாறியுள்ளதாக கருதப்படுகிறது. எனவே புதிய பாதிப்புகள் பதிவாகும் போதெல்லாம் பதற்றப்பட வேண்டியதில்லை.

Photo: magnific

அதே நேரத்தில் அலட்சியமும் கூடாது. அறிகுறிகள் தென்பட்டால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதும்தான் பாதுகாப்பான அணுகுமுறையாகும்.

Photo: magnific

தொண்டை வலி, லேசான காய்ச்சல், தொடர் இருமல், தலைவலி, அதிக உடல் சோர்வு, மூக்கு ஒழுகுதல், உடல்வலி போன்ற எல்லாம் அலட்சியம் செய்யக்கூடாத புதிய அறிகுறிகள்

Photo: magnific
புளிப்பு செர்ரி பழச்சாறு: உடலுக்கு தரும் 7 முக்கிய நன்மைகள்!