தினத்தந்தி
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக பல்வேறு கொலை மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
6 வயது குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள் வரை பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற தொடர் குற்றச்செயல்களின் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்கச் சீர்கேட்டிற்கு காரணமாக உள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் மதுபோதையில் இருப்பது கவலைக்குரியதாகும்.
சசிகலா புதிய கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன். எங்கள் கட்சி முன்கூட்டியே மக்களிடம் சென்று அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருகிறது.
பெரிய பொருளாதார ஆதாரம் இல்லாததால் மக்களை நேரில் சந்தித்து ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறோம்.
தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது.
மற்றவர்கள் அரசியலுக்கு வருவது எங்கள் கட்சியை பாதிக்காது. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை தேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.