சமையலை எளிதாக்கும் சின்ன சின்ன டிப்ஸ்.. இதோ உங்களுக்காக!

தினத்தந்தி

* வெங்காயம் அதிகமாக இருந்தால், அதை கடலை மாவில் உருட்டிப் பொரித்து சாம்பாரில் போடலாம்.

* சாம்பாரில் சுண்டைக்காய் சேர்ப்பதற்கு முன்பு, அதை எண்ணெயில் வதக்கினால் கசப்பு சற்று குறையும்.

* நெய் சாதத்தில் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால், நறுமணமும் சுவையும் கூடும்.

* பச்சை மிளகாய் நறுக்கும்போது கைகளில் எரிச்சல் ஏற்பட்டால், எலுமிச்சைச் சாறில் கைகளை கழுவலாம்.

* பூண்டு விழுதை பழுப்பு நிறமாகும் வரை வதக்கினால், அதன் பச்சை வாசனை போய்விடும்.

* குழம்புக்கு புளி கரைக்கும்போது, கெட்டியான புளிக் கரைசலை அதிகமாகச் சேர்க்கக் கூடாது. இல்லையெனில் குழம்பு அதிகம் புளித்துவிடும்.

* குழம்பில் வெண்டைக்காய் சேர்ப்பதற்கு முன்பு, அதை எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.

* வெங்காயம் சீக்கிரமாக வதங்க, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கலாம்.

பூரியுடன் சாப்பிட சூப்பரான கிழங்கு மசாலா!