தினத்தந்தி
தினமும் குடிக்கும் தேநீரில் இஞ்சி, ஏலக்காய், புதினா இலைகளை சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.
ஆம்லெட் செய்யும்போது வெங்காயத்துடன் சிறிது தக்காளி சேர்த்தால் முட்டை வாசனை குறைந்து, சுவையும் அதிகரிக்கும்.
புதினா, மல்லி, கறிவேப்பிலையை நன்கு கழுவி, காற்றில் உலர்த்தி இலைகளை மட்டும் கிள்ளி காற்றுப்புகாத டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தால் சில நாட்கள் புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம்.
பாகற்காய் துண்டுகளில் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் தண்ணீரில் அலசி சமைத்தால் கசப்பு ஓரளவு குறையும்.
கூட்டு, பொரியல் செய்யும்போது தேங்காய் துருவலுக்கு பதிலாக புழுங்கல் அரிசியை வறுத்துப் பொடி செய்து தூவினால் சுவை நன்றாக இருக்கும்.
கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது சிறிது கெட்டித் தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் கருமையாகாமல் இருக்க உதவும்.
எலுமிச்சைப் பழத்தை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
ரவா தோசை செய்யும்போது 2 மேசைக்கரண்டி கடலை மாவு சேர்த்தால் தோசை நன்றாக சிவந்து மொறுமொறுப்பாக இருக்கும்.