நீர்த்துப் போன சில உணவுகளை கெட்டியாக்க எளிய டிப்ஸ்!

தினத்தந்தி

கூட்டு அல்லது குழம்பு நீர்த்துவிட்டால், பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால் அவை கெட்டியாகும். ருசியும் அதிகரிக்கும்.

அடை மாவு நீர்த்துவிட்டால், சிறிதளவு கார்ன்பிளேக்ஸ் தூள் சேர்த்து கலந்து விட்டால் மாவு கெட்டியாகிவிடும்.

குருமா நீர்த்துவிட்டால், ஒரு கைப்பிடி அளவு நூடுல்ஸை நொறுக்கி சேர்த்து கொதிக்க வைத்தால் அது கெட்டியாகிவிடும்.

கோதுமை அல்வா அல்லது மைதா அல்வா செய்யும்போது நீர்த்துவிட்டால், சிறிதளவு சோளமாவை கரைத்து சேர்த்தால் அல்வா கெட்டியாகி ருசியும் அதிகரிக்கும்.

பொங்கல் நீர்த்துவிட்டால், சிறிதளவு வறுத்த ரவை அல்லது அவலை பொடித்து பொங்கலுடன் சேர்த்து கிளறினால் போதும்.

தோசை மாவு நீர்த்துவிட்டால், 2 ஸ்பூன் ரவை அல்லது அரிசி மாவை சேர்த்து கலந்து விட்டால் மாவு கெட்டியாகும். இதனால் அதிக புளிப்பும் இருக்காது.

சாதம் குழையாமல் இருக்க, சாதம் வெந்தவுடன் அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறினால் சாதம் உதிரியாக இருக்கும்.

பருப்பு பாயசம் அல்லது ஜவ்வரிசி பாயசம் நீர்த்துவிட்டால், இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடரை தண்ணீரில் கரைத்து அதில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் கெட்டியாகிவிடும்.

ரமலான் நோன்பு ஸ்பெஷல்: மட்டன் கஞ்சி செய்வது எப்படி?