தினத்தந்தி
பொதுவாக காணப்படும் செரிமான பிரச்சினைகளில் ஒன்றாக மலச்சிக்கல் உள்ளது. உலகம் முழுவதும் பலர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர்.
வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவாக மலம் கழிப்பது, மலம் கெட்டியான மற்றும் வறண்ட நிலையில் வெளியேறுவது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.
இது அசவுகரியத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தி, தினசரி வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். அதனால் கோபம், எரிச்சல், சோர்வு, கவனம் குறைதல் போன்ற பிரச்சினைகளும் உருவாகும்.
ஆனால் சில எளிய உணவுமுறை மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.
காலையில் சூடான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அருந்துவது குடல் இயக்கத்தை தூண்டும். ஜீரணத்தை மேம்படுத்தும்.
ஓட்சில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலத்தை மென்மையாக்கி வெளியேற்ற உதவும். பப்பாளி குடல் இயக்கத்தை தூண்டும்.
சியா விதை: நீரை உறிஞ்சி ஜெல்லி போன்று மாறி குடலில் நுழைந்து மலத்தை மென்மையாக மாற்றும்.
10-15 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு, மலச்சிக்கலை குறைக்க உதவும்.