காலையில் வேகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினத்தந்தி

காலையில் வேகமாக சாப்பிடும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் இது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

வேகமாக சாப்பிடுவது, மூளைக்கு லெப்டின் (Leptin) போன்ற ஹார்மோன்களை வெளியிட போதுமான நேரத்தை வழங்காது.

இந்த ஹார்மோன்தான் வயிறு நிரம்பிய உணர்வை உருவாக்கி, உடலில் போதுமான எனர்ஜி இருப்பதை மூளைக்கு signal செய்கிறது.

ஆனால், வேகமாக சாப்பிடும் போது இந்த ஹார்மோன் செயல்பாடு தாமதமாகி, மூளைக்கு தகவல் சரியான நேரத்தில் செல்லாது.

இதன் விளைவாக, இன்னும் பசி இருக்கிறது என்று மூளை தவறாக நினைத்து, தேவைக்கு அதிகமாக சாப்பிட அனுமதிக்கிறது.

இதனால், அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கம் உருவாகும், செரிமான கோளாறுகள் ஏற்படும், வயிறு உப்புசம் (bloating) தோன்றும், வாயுத்தொல்லை (gas) அதிகரிக்கும்.

எனவே, உணவை மெதுவாகவும் நன்றாக மென்று சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் அவசியம்.

உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் தவறான தேநீர் பழக்கங்கள்!