தினசரி சமையலுக்கு ஸ்மார்ட் ஐடியாஸ்!

தினத்தந்தி

உளுந்து வடை செய்யும் போது அதிக எண்ணெய் உறிஞ்சாமல் இருக்க, கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா சட்னியில் தேங்காய் இல்லையெனில், பொட்டுக்கடலை சேர்த்தாலும் சுவை மாறாது.

முருங்கை கீரையுடன் கடலைப்பருப்பு, உளுந்து, வரமிளகாய் வறுத்து அரைத்து பொடியாக வைத்தால், இட்லி பொடி தேவையில்லை – சுவையும் ஆரோக்கியமும் அதிகம்.

முள்ளங்கி பொரியல் செய்யும்போது சிறிது கருவாடு சேர்த்தால் அதன் மணம் குறைந்து, சுவை அதிகரிக்கும்.

கத்தரிக்காய் எண்ணெய் குழம்பில் ஒரு ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்தால், கத்தரிக்காய் கருப்பாகாமல் இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சி நெய் செய்யும்போது, இறுதியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் நீண்ட நாட்கள் மணம் காக்கும்.

பீன்ஸ், கொத்தவரங்காய் வேகவைக்கும் போது ஆரம்பத்தில் உப்பு சேர்க்காமல், இறுதியில் சேர்த்தால் விரைவாக வெந்து விடும்.

வடை மாவில் கொஞ்சம் சாதம் சேர்த்து செய்தால், எண்ணெய் குடிக்காமல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஆட்டு போட்டி கிரேவி-சூப்பரான சுவை!