வீட்டில் LPG கேஸ் மிச்சப்படுத்த சில எளிய வழிகள்!

தினத்தந்தி

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய எரிவாயுவாக கேஸ் சிலிண்டர்கள் திகழ்கின்றன.

தற்போது உலகளவில் நிலவும் போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் போன்ற காரணங்களால் சில பகுதிகளில் LPG விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம்.

இந்தியாவில் சில பகுதிகளில் LPG சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உணவகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழல் வீட்டில் கேஸை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

பிரஷர் குக்கர் பயன்படுத்துங்கள்: சமைக்கும் நேரத்தையும் கேஸ் பயன்பாட்டையும் குறைக்க பிரஷர் குக்கர் மிகவும் உதவியாக இருக்கும். இது நீராவியை தக்கவைத்து உணவை விரைவாக சமைக்க உதவுகிறது.

கேஸ் பர்னரை சுத்தமாக வைத்திருங்கள்: அடுப்பின் பர்னர் அழுக்காக இருந்தால் தீ சரியாக வராது. இதனால் சமையலுக்கு அதிக நேரம் எடுக்கும். பர்னரை சுத்தமாக வைத்தால் கேஸ் மிச்சப்படுத்தவும் பாதுகாப்பாக சமைக்கவும் முடியும்.

உணவுப் பொருட்களை முன்பே ஊறவையுங்கள்: பீன்ஸ், பருப்பு, அரிசி போன்றவற்றை சமைக்கும் முன் 20–30 நிமிடங்கள் ஊறவைத்தால் அவை விரைவாக வேகும். இதனால் கேஸ் பயன்பாடு குறையும்.

சரியான பாத்திரத்தை பயன்படுத்துங்கள் : பெரிய பர்னரில் சிறிய பாத்திரம் வைத்தால் தீ வெப்பம் வெளியே வீணாகும். அதனால் அடுப்பிற்கு ஏற்ற அளவிலான பாத்திரத்தை பயன்படுத்துவது முக்கியம்.

பாத்திரத்தை மூடி வைத்து சமைக்கவும்: சமைக்கும் போது பாத்திரத்தை மூடி வைத்தால் வெப்பம் வெளியேறாமல் உள்ளே தங்கி, உணவு விரைவாக வெந்து முடியும். இதனால் கேஸ் பயன்பாடு குறையும்.

LPG சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் சமையலில் சில சிறிய மாற்றங்களை செய்தாலே கேஸ் மிச்சப்படுத்தவும், சமைக்கும் நேரத்தையும் குறைக்கவும் முடியும்.

சமையல் கேஸ் சிலிண்டரின் அடியில் இருக்கும் ஓட்டைகள் ஏன்?