சமையல் கேஸ் சிலிண்டரின் அடியில் இருக்கும் ஓட்டைகள் ஏன்?

தினத்தந்தி

சமையல் கேஸ் சிலிண்டரின் அடியில் இருக்கும் இரும்பு வளையத்தில் சில ஓட்டைகள் இருப்பதை கவனித்துள்ளீர்களா?

பலரும் அது சிலிண்டரை தூக்குவதற்காக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.

பொதுவாக சிலிண்டரை தரையில் வைத்து பயன்படுத்துகிறோம். அடியில் காற்று செல்ல வழி இல்லையெனில், ஈரம் தேங்கி அந்த பகுதி விரைவில் துருப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சிலிண்டரின் அடிப்பகுதி பலவீனமாகி விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

இந்த ஓட்டைகள் இருப்பதால் காற்றோட்டம் ஏற்பட்டு, சிலிண்டரின் அடிப்பகுதி எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கும். இதனால் துருப்பிடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், சமையல் கேஸ் காற்றை விட கனமானது. ஒரு வேளை கேஸ் லீக் ஏற்பட்டால் அது மேலே செல்லாமல் தரையில் தேங்கி நிற்கும். அப்போது இந்த ஓட்டைகள் இருப்பதால் கேஸ் அங்கே தேங்காமல் வெளியேறி விபத்து ஏற்படும் அபாயம் குறையும்.

அதேபோல், சிலிண்டரின் எடை மற்றும் காலாவதி தேதி போன்ற தகவல்கள் மேலுள்ள வளையத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உதாரணமாக A-26 என்று இருந்தால், அது 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலாவதியாகும் என்பதை குறிக்கிறது.

பூவில் இருந்து கிடைக்கும் அரிசியில் இவ்வளவு நன்மைகளா?