தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்..மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்..தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்..இட்லி மாவுடன் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் கலந்து இட்லி தட்டில் வேக வைத்தால் சத்தான வெஜிடபுள் இட்லி தயார்..பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்..இட்லி தோசைக்கு சட்னி அரைக்கும் போது ஊறவைத்து முளை கட்டிய பச்சைப்பயறு சேர்த்து அரைத்தால் சுவையுடன் சத்தும் கிடைக்கும்..பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணா மல் போய்விடும்..Explore