உடல் எடையைக் குறைக்க உதவும் மசாலாப் பொருட்கள்!

தினத்தந்தி

எடைக் குறைப்பில் உடற்பயிற்சியை விட, உணவு முதன்மையான பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் எடை குறைப்புக்கு உதவுகின்றன.

credit: freepik

லவங்கப் பட்டை: அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை லவங்கப்பட்டை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பசியை அடக்குகிறது, உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

credit: freepik

சோம்பு: பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு, நார்ச்சத்து நிறைந்தது. இது வைட்டமின்களையும், தாது உப்புக்களையும் உடல் உறிஞ்சுவதற்கு உதவும். உடலில் சேரும் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும்.

credit: freepik

ஏலக்காய்: இனிப்பு மற்றும் தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய், நறுமணத்தைத் தருவதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும்; குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. .

credit: freepik

மிளகு: மிளகில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இயற்கையான வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படுகிறது. இதில் உள்ள 'தெர்மோஜெனிக்' தன்மை தேவையற்ற கலோரிகளையும், கொழுப்பையும் எரிக்கும்.

credit: freepik

மஞ்சள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள 'குர்குமின்' உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், எடை அதிகரிக்காமலும் தடுக்கிறது.

credit: freepik

வெந்தயம்: நார்ச்சத்து நிறைந்த வெந்தயம், அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கிறது. வெந்தயத்தில் உள்ள நீரில் கரையும் தன்மைக் கொண்ட மூலக்கூறுகள், கொழுப்பு மூலக்கூறுகளை அழிக்கும் ஆற்றல் பெற்றவை.

credit: freepik
இதுதான் முடி கொட்டுவதற்கான காரணமா?