சூப்பரான சிற்றுண்டி முட்டை பேஜோ!

தினத்தந்தி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முட்டையை வைத்து, காரசாரமான முட்டை பேஜோவை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். மொறுமொறுப்பான வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாயுடன் இந்தச் சிற்றுண்டி சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்; முட்டை – 2, வெங்காயம் – 2, பூண்டு – 1, காய்ந்த மிளகாய் – 10, உப்பு கலந்த தண்ணீர் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு, புளிக்கரைசல் – தேவையான அளவு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை; முதலில் முட்டைகளை நன்றாக வேகவைத்து, ஓட்டை நீக்கி வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து மொறுமொறுப்பாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

அதே எண்ணெயில் பூண்டையும் காய்ந்த மிளகாயையும் தனித்தனியாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஆறியதும் சிறு துண்டுகளாக நொறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், பூண்டு மற்றும் நொறுக்கிய காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். காரத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

வேகவைத்த முட்டையை நடுவில் லேசாகக் கீறி, அதன் உள்ளே தயாரித்த வெங்காய மசாலாவைச் சிறிதளவு வைக்கவும்.

அதன் மேல் உப்பு கலந்த தண்ணீர், எலுமிச்சைச் சாறு, புளிக்கரைசல் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து, கொத்தமல்லித் தழையைத் தூவிப் பரிமாறவும். சுவையான, காரசாரமான முட்டை பேஜோ தயார்!

ஆறு மாதங்கள் ஆனாலும் கெட்டுபோகாத தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி?