பிஸினஸ் தொடங்குகிறீர்களா? வெற்றிக்கு தேவையான முக்கிய திறமைகள் என்ன?

தினத்தந்தி

ஒரு தொழிலை தொடங்குவது மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக நடத்துவதற்கும் சில முக்கிய திறமைகள் அவசியம். அந்த திறமைகளை வளர்த்துக்கொண்டால் தொழிலில் நீண்ட கால வெற்றியை அடைய முடியும்.

1. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் (Sales & Marketing): சிறந்த தயாரிப்பை உருவாக்குவது மட்டும் போதாது. அதை சரியான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனே தொழிலின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. எனவே, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் அறிவு மிகவும் முக்கியம்.

2. பிராண்டிங் மற்றும் விளம்பரம் (Branding & Advertisement): ஒரு நிறுவனத்தின் பெயரை மக்களிடம் கொண்டு சேர்க்க பிராண்டிங் அவசியம். அதனுடன் சரியான விளம்பர உத்திகளை பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எளிதில் பெற முடியும்.

3. நேர நிர்வாகம் மற்றும் பண நிர்வாகம்: திட்டமிட்ட நேரத்தில் பணிகளை முடிப்பதும், வருமானம் மற்றும் செலவுகளை சரியாக நிர்வகிப்பதும் தொழிலை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முக்கிய அம்சங்களாகும்.

4. நிறுவன நிர்வாகம் (Organization Management): தொழில் வளர வளர பணியாளர்கள், பொறுப்புகள் மற்றும் செயல்முறைகளை திறமையாக நிர்வகிக்கும் திறன் தேவை. இதுவே நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.

5. மன அழுத்த மேலாண்மை (Stress Management): தொழிலில் சவால்களும் அழுத்தங்களும் இயல்பானவை. அவற்றை அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாளும் திறன் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோரின் அடையாளமாகும்.

6. தகவல் தொடர்பு திறன் (Communication Skill): வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பேசும் திறன் தொழிலின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தன்னம்பிக்கையும் இதற்கு அடிப்படையாக அமைகிறது.

7. உடல் மொழி (Body Language): பேசும் விதம் மட்டுமல்ல, உடல் மொழியும் மற்றவர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான அணுகுமுறையுடன் செயல்படுவது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து, தொழிலின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும்.

வல்லாரை முதல் பாதாம் வரை... குழந்தைகளின் நினைவாற்றலை கூட்டும் சிறந்த உணவுகள்!