ரோட்டுக்கடை ஸ்டைல் கீரை பக்கோடா!

தினத்தந்தி

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் இது.

தேவையான பொருட்கள் : ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு, கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, சீரகம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும்.

இதில் கீரையை சேர்த்து, தண்ணீர் சிறிதளவு சேர்த்து உதிரியாக (பக்கோடா மாவு பதம்) கலக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

சூடான, குர்குரப்பான கீரை பக்கோடா ரெடி!

சூப்பரான மாங்காய் பச்சடி!