சூப்பரான மாங்காய் பச்சடி!

தினத்தந்தி

மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது.மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள்: மாங்காய் - 2, கடுகு - 2 தேக்கரண்டி, உளுந்து - 1 தேக்கரண்டி, பெருங்காயம் - ½ தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 3 , பச்சை மிளகாய் - 1 , மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, வெல்லம் - 150 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை: மாங்காய், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை சூடுபடுத்தவும். பின்பு, அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கவும்.

பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு அதில் வெல்ல தண்ணீர் சேர்த்து கலக்கவும் .கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும். இப்பொழுது சுவையான 'மாங்காய் பச்சடி' தயார்.

பேக்கரி ஸ்டைல் முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?