முதுகு வலி வந்துவிட்டதா? இதை பின்பற்றுங்கள்!

தினத்தந்தி

இன்றைய வாழ்க்கை முறையில், பலரும் 8 முதல் 12 மணி நேரம் வரை ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் முதுகுவலி போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வலியிலிருந்து விடுபட, கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றலாம்:

தினமும் குறைந்தது 21 முறை குனிந்து கால்களைத் தொட்டு மீண்டும் நிமிருங்கள்.

அமரும்போது முதுகை வளைக்காமல் நேராக அமரவும்; நிற்கும்போதும் நிமிர்ந்து நிற்கவும்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்காமல் இடையே எழுந்து நகருங்கள்.

சுருண்டு படுக்காதீர்கள். அதிக உயரமுள்ள கனமான தலையணைகளை தவிர்க்கவும்.

தினமும் குறைந்தது 20–30 நிமிடங்கள் வேகமாக நடைபயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து 60–70 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து இருக்காதீர்கள்.

இருசக்கர வாகனம் ஓட்டும்போது குனிந்து ஓட்டாமல் நேராக அமர்ந்து ஓட்டுங்கள்.

கனமான பொருட்களை தூக்கும் போது முதுகை குனியாமல், முழங்கால்களை மடக்கி தூக்குங்கள்.

காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை மேலே நீட்டி உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு நார்த்தங்காய் ஏன் அவசியம்?