தினத்தந்தி
தேங்காய் பால் பாயசம்: பச்சரிசியை ஊறவைத்து, தேங்காய் சேர்த்து அரைத்து பாலில் வேகவைத்து பாயசம் செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.
சத்தான கொள்ளு அடை: பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்து அடை தயார் செய்து சாப்பிடலாம். இது உணவில் கூடுதல் ஊட்டச்சத்தைச் சேர்க்கும்.
சுவையான அவியல்: அவியல் செய்தவுடன் இறுதியில் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்துக் கலந்தால் சுவை அள்ளும்.
மணமான எலுமிச்சை ஊறுகாய்: எலுமிச்சம் பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும்போது, ஒரு பெரிய துண்டு இஞ்சியையும் நறுக்கிச் சேர்த்தால் நல்ல மணம் கிடைக்கும்.
கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு: கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் கருப்பாகாமல் இருக்க உதவும்.
காய்கறிகள் சீக்கிரம் வேக: பீன்ஸ், கொத்தவரங்காய் வேகவைக்கும்போது ஆரம்பத்திலேயே உப்பு சேர்க்காமல், காய்கறிகள் வெந்த பிறகு சேர்க்கலாம்.
வாழைப்பூ கறை படியாமல் இருக்க: வாழைப்பூ நறுக்குவதற்கு முன்பு கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டால் கறை படிவதைத் தவிர்க்க உதவும்.
ருசியான சாம்பார்: துவரம் பருப்பு வேகவைக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்தால் சாம்பாருக்கு நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
சுவையான ராஜ்மா: ராஜ்மாவை நன்றாக வேகவைத்து, தாளிக்கும்போது கடுகு, இஞ்சி, மிளகாய் சேர்க்கவும். இறுதியில் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.