சூப்பரான இனிப்பு மங்களூர் போண்டா!

தினத்தந்தி

கர்நாடகத்தில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்ற சிற்றுண்டிகள் மிகவும் பிரபலமானவை. இதில் இனிப்பு சுவையில் மங்களூர் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; மைதா - 1 கப், சர்க்கரை - ½ கப், தயிர் - 1½ கப், பேக்கிங் சோடா - 1 சிட்டிகை, உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை; முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவை சேர்த்து, அதனுடன் பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.

பின்னர் அதில் தயிரை சேர்த்து, போண்டா மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

சுவையான இனிப்பு மங்களூர் போண்டா தயார்!

பப்பாளிப்பழ மில்க் ஷேக்!