121 கிலோ தங்க நகைகள்;திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.207 கோடி காணிக்கை வழங்கிய தமிழக தொழிலதிபர்!

தினத்தந்தி

ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின், அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, தனது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தார்.

பின்னர், அவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

அந்த பக்தர் தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது

தனது செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நலப் பணிகளுக்காகச் செலவிடவும், இறைவனுக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் அவர் முடிவு செய்தார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னிலையில், கோவில் அதிகாரிகளிடம் காணிக்கையாக வழங்கினார்.

இந்த தங்க ஆபரணங்கள் 9 தொகுப்புகளாக 46 வகையான நகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. செய்கூலியையும் சேர்த்து இவற்றின் மதிப்பு ரூ.207 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதுகுத்தண்டுவடம் நமது உடலில் செய்யும் முக்கிய வேலைகள்!