தினமும் ஷாம்பு போடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்!

Dinesh

நன்மைகள்: சல்பேட் ரசாயனம் கலப்பில்லாத ஷாம்புவை தினசரி பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்வது, எண்ணெய் பசை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.
credit: freepik
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுபவர்கள், மாசுபாடு நிலவும் பகுதியில் வசிப்பவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை சுத்தமாக பராமரிக்க உதவும்.
credit: freepik
ஸ்டைலிஷாக காட்சியளிக்க விரும்புபவர்கள், தலைமுடிக்கு ஜெல், ஸ்பிரே உபயோகிப்பவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது தலைமுடி அழகுற ஜொலிக்க உதவிடும்.
credit: freepik
குறைபாடுகள்: அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்யை அகற்றி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
credit: freepik
சில ஷாம்புகளில் கடுமையான ரசாயனங்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ளன. அவை உச்சந்தலையை எரிச்சலடைய செய்யலாம்.
credit: freepik
எது சிறந்தது? இயற்கையாகவே எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை கொண்டவர்கள் அதிகப்படியான எண்ணெய் படிவதை தடுக்க தினமுமோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
credit: freepik
வறண்ட, சுருள் முடி கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடி உதிர்தலைக் குறைக்க வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஷாம்பு பயன்படுத்தலாம்.
credit: freepik
தினமுமோ, வாரம் ஒருமுறையோ எப்போது பயன்படுத்துவதாக இருந்தாலும் மென்மையான சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவிடும்.
credit: freepik
Explore