credit: freepik
credit: freepik

பளபளப்பான சருமத்திற்கு இதை செய்யுங்க!

Published on
தேன்: இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சரும நலன் காக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். சிறிதளவு தேனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவிவிடலாம்.
credit: freepik
கற்றாழை: சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை கொடுக்க வல்லது. கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம்.
credit: freepik
பப்பாளி: முதலில் பாலை கொண்டு முகத்தை நன்றாக கழுவவும். பின்பு அரை பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யதால் சருமம் பொலிவுடன் மின்னுவதை காணலாம்.
credit: freepik
வெள்ளரிக்காய்: உணர்திறன் மற்றும் முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளரிக்காய் `மாஸ்க்'ஆக பயன்படுத்தலாம்
credit: freepik
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து சருமத்தில் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்யலாம். ஐந்து நிமிடங்கள் கழித்து துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவுடன் மிளிர தொடங்கும்.
credit: freepik
எலுமிச்சை: இதில் இயற்கையாகவே வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. சர்க்கரை, தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது.
credit: freepik
மஞ்சள்: இது சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தைப் போக்கவும், சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யவும் உதவும்
credit: freepik

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com