தினத்தந்தி
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெப்பநிலை உயர்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனால் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது மிகவும் அவசியமாகியுள்ளது.
கோடை காலத்தில் மோர் பருகுவது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதில் உள்ள பொட்டாசியம் உடலின் திரவ சமநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பாலை விட மோரில் கொழுப்பும் கலோரியும் குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.
எண்ணெய் மற்றும் கார உணவுகள் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினைகளை குறைக்க மோர் உதவுகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது.
மோர் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
மோரில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாக இருக்கும். எலும்பு சிதைவு நோய்களை தடுப்பதற்கும் இது உதவுகிறது.
தினசரி மோர் குடிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மோர் நல்ல பானமாக கருதப்படுகிறது.
மோர் உடலுக்கு சிறந்த நீரேற்ற பானமாக செயல்படுகிறது. வியர்வை மூலம் இழக்கும் எலக்ட்ரோலைட்டுகளை ஈடு செய்து நீரிழப்பை தடுக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
மோரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கும் நன்மை தருகிறது. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதோடு முகப்பரு மற்றும் வயதான தோற்றத்தை குறைக்கவும் உதவுகிற