தினத்தந்தி
என்ன தான் வீட்டு தோட்டத்திலோ, கொல்லைப்புறத்திலோ முருங்கை மரம் இருந்தாலும் கூட, அதன் பூவை எடுத்து சமைப்பவர்கள் மிக, மிக அரிது. ஆனால் அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொண்டீர்கள் என்றால், இனி முருங்கைப் பூவை சமைத்து, ருசிக்காமல் விடமாட்டீர்கள்.
முருங்கை மரங்களில் பூத்துக் குலுங்கும்முருங்கைப் பூ பார்க்க அழகாக இருக்கும். உடல் வலிக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான தாதுவான வைட்டமின் ஏ உள்ளது.
வேலை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பார்கள், அவர்கள் உணவில் முருங்கைப் பூவை சேர்த்துக்கொண்டால் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு இரண்டும் காணாமல் போகும்.
முருங்கைப் பூக்களை சுத்தப்படுத்தி, வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இந்தப் பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் தூக்கமின்மை, நரம்பு நோய்கள் நீங்கி உடல் குதூகலமாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முருங்கைப் பூவை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும், தேநீரை பருகலாம்.
முருங்கைப் பூவைப் பொடி செய்து தேனுடன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், கண் குறைபாடுகள் குணமாகும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூக்களை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
கடுகு, பூண்டு, வெங்காயம், சிறிது காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பூக்களுடன் சேர்த்து வறுத்துச் சாப்பிட்டு வர, பெண்களின் உடல் வலுப்பெறுவதோடு, தாய்ப்பால் பெருகும்.
முருங்கைப் பூக்களை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் உடல்நிலையை சரிபார்க்கவும். இதற்கு பெரிதாக பக்கவிளைவுகள் இல்லை என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்வது நல்லது.