பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பிளம்ஸ், பப்பாளிப் பழம், வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்..அரிசி வகைகளான சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசிகளை உணவில் சேர்ப்பது நல்லது..மீன்களை பொரித்து உண்ணக் கூடாது. மத்திச்சாளை, விளமீன் குழம்புகள் சிறந்தது..காய்கறிகளில், பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, பாகற்காய், பூசணிக்காய், சுரைக்காய், பிராக்கோலி, நெல்லிக்காய் ஆகியவை நல்லது.தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, பாலாக் கீரை , போன்ற நார்ச்சத்து நிறைந்த, கீரை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்..விதைகளில், வால்நட், பாதாம், முளைகட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை, பாசிப் பயறு, பச்சைப் பட்டாணி இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்..அவகோடா, சியா விதைகள், பிளாக்ஸ் சீட்ஸ், பூசணி விதை, வெள்ளரி விதை இவைகளை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்..Explore