அசைவம் சாப்பிடாதவர்களுக்கு புரதச்சத்தை பெற சிறந்த சைவ உணவுகள்!

தினத்தந்தி

ஒவ்வொருவரும் உடல் எடையில், ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தினசரி புரதம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்ணுக்கு, ஒரு நாளுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படும்.

credit: freepik

உடலில் புரதச்சத்து குறைவதன் காரணமாக தசைகள் வலுவிழத்தல், முடி உதிர்வு, சரும பாதிப்பு, ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு, வளர்ச்சியின்மை, தசை வீக்கம், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

credit: freepik

புரதச்சத்து பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது. அசைவ உணவுகளை ஒப்பிடும்போது, சைவ உணவுகளில் புரதம் குறைவாகவே உள்ளது. எனவே சைவ உணவை மட்டும் உண்பவர்கள், தினசரி தங்களுக்குத் தேவையான புரதச்சத்தை பெறுவது குறித்து பார்க்கலாம்.

credit: freepik

துவரை, பச்சைப்பயிறு, உளுந்து, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கொள்ளு, தட்டைப்பயறு, பச்சைப்பட்டாணி, சோயா, பாதாம், பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

credit: freepik

கீரை வகைகளில் பசலைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, தண்டுக்கீரை போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

credit: freepik

புரோக்கோலி, காளான், சோளம், கேழ்வரகு, முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றிலும், பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பன்னீர் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

credit: freepik

எளிதாக கிடைக்கும் சுண்டல், வேர்க்கடலை உருண்டை, உடைத்த கடலை உருண்டை, பால், தயிர் போன்றவற்றை பெண்கள் தவறாமல் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

credit: freepik
முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 வகையான உணவுகள்!