தினத்தந்தி
அகஸ்தியர் அருவி: நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
திற்பரப்பு அருவி: கன்னியாகுமரி மாவட்டத்தின் "குமரி குற்றாலம்" என்று அழைக்கப்படும் இந்த திற்பரப்பு அருவியில், ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். அதனால் கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் இங்கு சென்று மகிழலாம்.
குற்றாலம்: 'தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் மூலிகை குணம் நிறைந்த நீர்வீழ்ச்சிகள் உள்ளன. முக்கியமாக பிரதான அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகியவை மிகவும் பிரபலம்.
மணிமுத்தாறு: நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அருவியைத் தவிர, அருகில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை மற்றும் அதன் பூங்காக்கள் குடும்பத்துடன் ரசிக்க ஏற்ற சிறந்த இடங்களாகும்.
ஒகேனக்கல்: தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஒகேனக்கல் அருவி, அதன் இயற்கை எழில் கொஞ்சும் சூழலுக்குப் பெயர் பெற்ற ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு பரிசல் சவாரி செய்வது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
கும்பக்கரை அருவி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
குரங்கு நீர்வீழ்ச்சி: இயற்கை மீதான உங்கள் ஆசையின் இலக்கை அடைய துளிகூட ஆர்வம் குறையாதவரா நீங்கள், குரங்கு நீர்வீழ்ச்சிக்கு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். இந்த அழகிய அருவி பொள்ளாச்சிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
சுருளி அருவி: தேனி மாவட்டத்தின் அமைந்துள்ள இந்த சுருளி அருவி, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாகும். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இடம், சுற்றுலாப் பயணிகளுக்குக் புத்துணர்ச்சி தரும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.