தினத்தந்தி
காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இது எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சூரிய ஒளி உடலின் சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்தி, இரவு தூக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும் செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் உயர்த்துகிறது.
ஆனால் வைட்டமின் டி அதிகரிக்க அதிகாலை சூரிய ஒளி மட்டும் போதுமானதல்ல. ஏனெனில், தேவையான புறஊதாக்கதிர்கள் காலை 7 மணிக்குப் பிறகே வலுவாக கிடைக்கத் தொடங்குகின்றன.
வைட்டமின் டி உற்பத்திக்கான சிறந்த நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இந்த நேரத்தில் சூரிய ஒளி 15 நிமிடங்கள் கைகள், கால்கள், முகம் போன்ற பகுதிகளில் படும்படி இருக்க வேண்டும்.
ஆனால் வாரத்திற்கு 4–5 முறை இதை பின்பற்றலாம். மேலும் 15 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் இருப்பது சரும சேதத்தை ஏற்படுத்தலாம்.
குளிர்காலத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூரிய ஒளியில் 15 நிமிடங்கள் இருப்பது சிறந்ததாகும். அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்ப்பது அவசியம்.